முதலமைச்சர் நசீர் அஹமட் நடந்துகொண்ட விதத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது: அமைச்சர் ரவூப் ஹக்கீம் - THE MURASU

May 29, 2016

முதலமைச்சர் நசீர் அஹமட் நடந்துகொண்ட விதத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது: அமைச்சர் ரவூப் ஹக்கீம்

கடற்படை அதிகாரி ஒருவரை வசைபாடியதாக கூறப்படும் சம்பவத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் நடந்துகொண்ட விதத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று நடைபெற்ற வைபவமொன்றின் பின் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தும் கிழக்கு மாகாண முதலமைச்சர், சம்பூர் கடற்படையின் கட்டளையிடும் அதிகாரி கப்டன் ரஞ்சித் பிரேமரத்னவை கடந்த 20ஆம் திகதி பகிரங்கமாக திட்டியுள்ளார்.

குறித்த சம்பவம் நடந்து சுமார் ஒரு வாரத்தின் பின்னர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் முதன்முதலாக இதுபற்றி கருத்து வெளியிட்டுள்ளார்.

மேலும் இந்த சம்பவம் குறித்து முதலமைச்சருக்கு எதிராக தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதன்போது தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here