• Latest News

    Oct 1, 2015

    சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வலய மட்ட சிறுவர் தின நிகழ்வுகள்

    எம்.எம்.ஜபீர்
    சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வலய மட்ட சிறுவர் தின நிகழ்வுகள் இன்று சவளக்கடை வீரத்திடல் அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
     
    சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
    இதன்போது சிறுவர்களை மகிழ்விக்கும் வகையில் கலை, கலாசார, விளையாட்டு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

    இந்நிகழ்வில் கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் ஏ.எல்.ஜலீல், சவளக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எம்.எம்.நஜீப், வலயக் கல்வி அலுவலக பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தின் கீழுள்ள சம்மாந்துறை, இறக்காமம், நாவிதன்வெளி கோட்டக் கல்வி அலுவலக பிரிவிலுள்ள பாடசாலைகளின் அதிபர்கள், பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என மேலும் பலர் கலந்து கொண்டனர்.












     
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வலய மட்ட சிறுவர் தின நிகழ்வுகள் Rating: 5 Reviewed By: The Murasu
    Scroll to Top