• Latest News

    Oct 26, 2014

    ஜனாதிபதி வேட்பாளர்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே பொருத்தமானவர்: BBS

    தற்போதுள்ள ஜனாதிபதி வேட்பாளர்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே பொருத்தமானவர். எனவே பொது பல சேனாவின் ஆதரவை அவருக்கு வழங்கத் தீர்மானித்துள்ளோம். என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார் எனசிங்கள ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது . 

    எனினும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்று அடக்கி வாசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அரசாங்கத்தின் ஆட்டம் அளவுக்கதிகமாகி விட்டது. எனவே கட்டுப்பாடு அவசியம். அதே போன்று அமைச்சர்களும் அடக்கி வாசிப்பது நன்று. இல்லாவிட்டால் நாங்கள் உத்தேசித்துள்ள தேசிய தலைவரை அரசியலுக்கு இப்போதே அழைத்து வர வேண்டிய நிர்ப்பந்தம் எங்களுக்கு ஏற்படும் என்றும் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஜனாதிபதி வேட்பாளர்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே பொருத்தமானவர்: BBS Rating: 5 Reviewed By: The Murasu
    Scroll to Top