யுவதியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி வைத்தியசாலையின் ஆறாவது மாடியிலிருந்து தள்ளி கொலை செய்த வைத்தியர் இந்திகவுக்கு மரண தண்டனை - THE MURASU

Sep 3, 2014

யுவதியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி வைத்தியசாலையின் ஆறாவது மாடியிலிருந்து தள்ளி கொலை செய்த வைத்தியர் இந்திகவுக்கு மரண தண்டனை

ஆடை தொழிற்சாலை யுவதியான சமிளா திசாநாயக்காவின் மரணம் தொடர்பான கொலை வழக்கின் சந்தேகநபரான வைத்தியர் இந்திக சுதர்சனபாலகே ஜயதிஸ்ஸ என்பவரை குற்றவாளியாக இனங்கண்ட நீதிமன்றம், அவருக்கு மரண தண்டனை விதித்து இன்று புதன்கிழமை தீர்ப்பளித்தது.

நீர்கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.ஏ.கபூர், அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

2007 ஆம் ஆண்டு, சிகிச்சைக்காக வந்த யுவதியை சந்தேக நபரான வைத்தியர் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பின்னர், வைத்தியசாலையின் ஆறாவது மாடியிலிருந்து கீழே தள்ளி கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரிலேயே வைத்தியர் கைதுசெய்யப்பட்டார். அவருக்கு எதிரான வழக்கு, நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here