உள்ளூராட்சித் தேர்தல் சட்டத்தில் திருத்தம்; அடுத்த மாதம் பாராளுமன்றில் - THE MURASU

Sep 10, 2014

உள்ளூராட்சித் தேர்தல் சட்டத்தில் திருத்தம்; அடுத்த மாதம் பாராளுமன்றில்

உள்ளூராட்சி தேர்தல் திருத்தச்சட்ட மூலத்தில் திருத்தம் செய்வது தொடர்பான சட்டமூலம் அடுத்த மாதம் சபையில் சமர்ப்பிக்கப்படவிருப்பதாக ஆளும் தரப்பின் பிரதம கொரடா அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

.புதிய சட்டத்திருத்தம் குறித்து ஊவா தேர்தலின் பின்னர் அரசியல் கட்சிகளுடன் பேச்சு நடத்த இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார் உள்ளூராட்சி தேர்தல் திருத்தச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கும் கட்சித் தலைவர்களுடன் பேச்சு நடத்த இணக்கம் காணப்பட்டிருந்தது. அதன்படி ஊவா தேர்தலின் பின்னர் கட்சித் தலைவர்களுடன் இது ஆராயப்படும் என தெரிவித்துள்ளார்  .

சகல கட்சிகளுடனும் பேசி இணக்கம் காணப்பட்டே உள்ளூராட்சி தேர்தல் திருத்தச் சட்டம் சமர்ப்பிக்கப்பட்டது. இதில் திருத்தம் செய்வதானால் சகல கட்சிகளுடனும் பேச வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார் .

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here