'திவிநெகும' (வாழ்வின் எழுச்சி) இலங்கையின் வறுமைக் குறைப்புக்கான புதிய பரிமானம் இன்று ஆரம்பம். - THE MURASU

Jan 3, 2014

'திவிநெகும' (வாழ்வின் எழுச்சி) இலங்கையின் வறுமைக் குறைப்புக்கான புதிய பரிமானம் இன்று ஆரம்பம்.

Displaying 2.JPGபி.எம்.எம்.ஏ.காதர்;
சமுகத்தின் வறுமையை ஒழித்து, வாழ்வாதார அபிவிருத்தியை முன்னெடுத்து சமூக சமத்துவத்தை ஏற்படுத்துவதை இலக்காகக் கொண்ட பிரதான தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டமான 'திவிநெகும' (வாழ்வின் எழுச்சி) வேலைத்;திட்டத்தின் புதிய பரிமானமான திவிநெகும அபிவிருத்தி திணைக்களம் (வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களம்) இன்றைய தினம் 2014.01.03 தாபிக்கப்படுகின்றது.
 
Displaying 3.JPGஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அன்று மஹிந்த சிந்தனை தூரநோக்கு வேலைத்திட்டத்தில் குறிப்பிட்டபடி தனிநபர் மற்றும் குடும்பங்களை அபிவிருத்தி செய்வதன் ஊடாக கிராமத்தை அபிவிருத்தி செய்து வறுமையற்ற இலங்கையை உருவாக்குவதற்கான தேசிய அபிவிருத்திப்பணி 'திவிநெகும' வேலைத்திட்டமாக உருவாக்கப்படகின்றது. பொரளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸீல் ராஜபக்ஷ அவர்களின் முழுமையான ஆலோசனை, வழிகாட்டல் என்பவற்றுக்கு அமைவாக உருவாக்கப்படுகின்ற இந்த வேலைத்திட்டம் இன்று முழுநாட்டு மக்களினதும் பாராட்டுக்குள்ளாகியுள்ளது.
 
Displaying 6.JPGDisplaying 5.JPGஇலங்கை சமுர்த்தி அதிகாரசபை, மலைநாட்டு அபிவிருத்தி அதிகாரசபை, இலங்கை தெற்கு அபிவிருத்தி அதிகார சபை, சமுர்த்தி ஆணையாளர் நாயகத் திணைக்களம், மலைநாட்டு கமத்தொழில் மறுசீரமைப்பு திணைக்களம். ஆகிய ஐந்து நிறுவனங்களினதும் பௌதீக மற்றும் மனிதவளம்; உள்ளிட்ட அனைத்தையும் ஒன்று சேர்த்து 2013ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க வாழ்வின் எழுச்சி சட்டத்தின் கிழ் இப்புதிய திணைக்களம் தாபிக்கப்படுகின்றது.

'பொருளாதார அபிவிருத்தி செய்முறையை முன்னெடுத்துச் செல்வதற்;கும் வறுமையை ஒழித்து சமுதாய சமத்துவத்தை உறுதிப்படுத்துதல்'என்ற தேசிய கொள்கைக்கு பயன் கொடுப்பதற்கும் வாழ்வின் எழுச்சி பயநுகரிகளை சமுதாய அடிப்படை ஒழுங்கமைப்புக்குள் இணைத்து அவ்வமைப்புக்களை சமுதாய மட்டம் ,கிராம உத்தியோகத்தர் பிரிவு மட்டம், கிராமிய மட்டம், பிராந்திய மட்டம் மற்றும் வலயமட்ட என்பவற்றினூடாக தேசிய மட்டம் வரை ஒருங்கிணைக்கும் ஒரு வலையமைப்பைக்  கட்டியெழுப்புவதே நோக்க மாகும். 
 
குறுநிதி வங்கித் தொழில் முறைமையை அபிவிருத்தி செய்து அதை மேம்படுத்துழிவதற்கு சமுதாய மட்டத்தில் ஒரு தேசிய அபிவிருத்தி செய்முறைக்குள் மக்களை ஒன்று திரட்ட நினைப்பதாலும் அதன் பொருட்டு சட்டமொன்றை உருவாக்குவதற்கான தேவை ஏற்பட்டுள்ளது.
 
வறுமையை ஒழிப்பிற்கும் தேசிய பொருளாதார அபிவிருத்திக்குமான முப்பரிமாண அணுகு முறை-வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை அமைப்புக்கள் குறுநிதி

வருமான அதிகரிப்பு வங்கிச் சேவை வாழ்வாதார அபிவிருத்தி சீராக்கம் வாழ்வின் எழுச்சி சட்டத்தின் பிரதான குறிக்கோளாகும்.
 
'திவிநெகும' வேலைத்திட்டத்தினூடாக எமது நாட்டின் சகல மக்களினதும் உணவுப் பாதுகாப்பு நிலையினை உறுதிசெய்து அவர்களின் வருமான மட்டத்தினை உயர்த்தி நற்பண்புகளை மேம்படுத்தி சமுக, பொருளாதார, கலாசார துறைகளில் அபிவிருத்தியை எற்படுத்தி மஹிந்த சிந்தனை தொலை நோக்கின் நோக்கத்தை நிறைவு செய்து இலங்கையின் வறுமையினை 6 வீதமாக குறைப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இத்திட்டம் கொண்டுள்ளது.
 
அதே போன்று சமுர்த்தி திட்டத்துடன் இணைந்தள்ள 27000 ஆயிரம் உத்தியோகத்தர்களினதும் தொழில்; பாதுகாப்பினை உறுதி செய்து அவர்கள் அனைவரும் ஓய்வூதியத்துடன் கூடிய பூரண உத்தியோகத்தர்களாக திவிநெகும திணைக்களத்தினுள் உள்ளீர்ப்புச் செய்யப்பட்டுள்ளனர் இதனால் உத்தியோகத்தர்களும் அவர்களது குடும்பத்தினரும் பல்வேறு நன்மைகளையும் பெறவுள்ளனர்.
 
கிராமப் புற வறிய மக்களுக்கு குறுநிதி வசதிகளைச் செய்து கொடுப்பதன் மூலம் அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் சமுர்த்தி வங்கி அமைப்பு இன்று முன்னிலை பெற்றுள்ளது. இந்த வங்கி கட்டமைப்பு எதிர்காலத்தில் 'திவிநெகும' வங்கி வலையமைப்பாக வியாபிக்கப்படவுள்ளது  இதற்கு ஏற்ற வகையில் பணிகளை மேற்கொள்வதற்கு தேவையான பயிற்சிகளை தமது பணிக்;குழுவுக்கு இலங்கை சமுர்த்தி அதிகாரசபை வழங்கி அவர்களை தயார்படுத்தியுள்ளது.
 
'திவிநெகும' திணைக்களத்தினால்; மக்களுக்கு கிடைக்கவிருக்கும் பலாபலன்கள் என்ன அவர்கள் இத்திட்டத்தில் எவ்வாறு இணைந்து கொள்ள வேண்டும், மக்கள் கட்டமைப்புக்கள் எவ்வாறு உருவாக்கப்படவிருக்கின்றன போன்ற விடயங்கள் உள்ளடக்கியதான மக்களை அறிவூட்டும் வேலைத்திட்டம் இலங்கை சமுர்த்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகத்தின் ஆலோசனையின் பிரகாரம் நாட்டின் சகல மாவட்டங்களிலும், கிராமிய மட்டத்தில்; மேற்கொள்ளப்பட்டு மக்களுக்கு அறிவூட்டப்பட்டுள்ளது.
 
மேலும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசத்தில் சகல பிரிவுகளிலும் இவ் வாழ்வின் எழுச்சி வேலைத்திட்டம் மிகவும் சிறப்பான முறையில் செயற்படுத்தப்படவுள்ளதுடன்; தற்போது சமுர்த்தி திட்டத்துடன்  இணைந்துள்ள 3958 சமுர்த்தி உத்தியோகத்தர்களும் 360000 சமுர்த்திப் பயனுகரி குடும்பங்களும் நேரடியாக நன்மை பெறவுள்ளனர்.
 
குறிப்பாக கல்முனை பிரதேச செயலக முஸ்லிம் பிரிவில்  வருமானம் குறைந்த 6175 குடும்பங்களும் சமுர்த்தி நலன்; உதவி பெறுகின்றனர். மேலும் 978 சிறுகுழுக்களையும்,  123 சமுர்த்தி சங்கங்களையும்  உள்ளடக்கிய கல்முனைக்குடி மற்றும் மருதமுனை-நட்பிட்டிமுனை ஆகிய இரண்டு வங்கிச் சங்கங்கள் உள்ளன.
 
இத்திட்டத்தினை முன்னெடுத்துச் செல்ல 5 சமுர்த்தி முகாமையாளர்களும் 49 சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகதர்களும் கடமையாற்றுகின்றனர்.4575 பயனாளிகளுக்கு ரூபா 750/= பெறுமதியான நலனுதவிக் கொடுப்பனவும் 1600 பயனாளிகளுக்கு ரூபா 210/= பெறுமதியான நலனுதவிக் கொடுப்பனவும் சமுர்த்தி வங்கியினூடாக வழங்கப்படுகிறது.
 
மேலும் இவ் வருமானம் குறைந்த மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வாழ்வாதார உதவிகள் மற்றும் பல கடன் திட்டங்களும் செயற்படுத்தப்படுகின்றது. இதன் அடிப்படையில் இரு சமுர்த்தி வங்கிகளின் ஊடாக 844 பயனாளிகளுக்கு சுயதொழில் கடனாக 16.6மில்லியன் ரூபாவும் உம் வாழ்வாதார கடனாக 2.3மில்லியன் ரூபாவும் வீடமைப்புக் கடனாக 2.1மில்லியன் ரூபாவும் வழங்கப்பட்டுள்ளது.
 
மேலும் வீட்டுத் தோட்டங்களை அபிவிருத்தி செய்யும் பொருட்டு விதைப் பக்கட்டுகள், பழ மரக்கன்றுகள் மற்றும் நல்ல இன முருங்கைக் கன்றுகளும் வழங்கப்பட்டுவருகிறது. இதற்கு மேலதிகமாக இக்குடும்பங்களிடையே ஒன்றுமையையும் புரிந்துணர்வையும் நல்லொழுக்கத்தையும் செயற்படுத்தும்பொருட்டு சமுர்த்தி சமூக அபிவிருத்திப் பிரிவு ஊடாக பல வேலைத்திட்டங்கள் செயற்படுத்தப்பகின்றது.
 
விதவைகளுக்கான திரியபியச வீடமைப்பு வேலைத்திடத்தின் கீழ் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இலங்கை சமுர்த்தி அதிகாரசபையின் நிதி ஒதுக்கீட்டில் இரண்டு சமுர்த்தி வங்கிச் சங்கக் கட்டிடங்கள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று ஜனவரி 3ம் திகதி ஸ்தாபிக்கப்பட்டுள்ள திவிநெகும திணைக்களம் தொடர்பில் கல்முனை பிரதேச செயலகத்தினூடாக சகல சமுர்த்தி சிறுகுழுக்கள், சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு சிறந்த முறையில் அவரவர் பிரிவுகளில் பொது இடத்தில் ஒன்று கூட்டப்பட்டு திவிநெகும திணைக்களம் ஸ்தாபிப்பது தொர்பான திட்டம் தொடர்பில் சிறப்பான அறிவூட்டல் வழங்கப்பட்டுள்ளது.
 
கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம். நௌபல் அவர்களின் வழிகாட்டலில் அம்பாறை மாவட்ட சமுர்த்தி பிரதி ஆணையாளர் அனுருத்த பியதாச, மாவட்ட சமுர்த்தி இணைப்பாளர் ஐ. அலியார் ஆகியோரின்  ஒருங்கிணைப்பில் கல்முனை பிரதேச செயலக சிரேஷ்;ட தiமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம். சாலிஹ் அவர்களின் ஒன்று படுத்தலி;ல் சிரேஷ்;ட கருத்திட்ட முகாமையாளர் ஏ.சி.அன்வர், மகாசங்க முகாமைத்தவப் பணிப்பாளர்  திருமதி பரீறா சஹீட்,  மருதமுனை-நட்பிட்டிமுனை வங்கி முகாமையாளர் எம்எம்.முபீன், கல்முனை வங்கி முகாமையாளர் எஸ்.சதீஸ் ஆகியோருடன் 49 சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்த்கள் தங்கள் பணிகளை முன்னெடுத்துவருகின்றார்கள்.
 
கல்முனை பிரதேச செயலகத்தில் கடமையாற்றி வரும் சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அனைவரையும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் திவிநெகும திணைக்களத்திற்குள் உள்வாங்குவதற்கான நியமனக்கடிதம் வழங்கிய நிகழ்வும் அண்மையில்; (29-12-2013) கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம். நௌபல் தலைமையில் நிந்தவூரில் நடைபெற்ற போது பிரதம அதிதியாகக்கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனை அபிவிருத்திக் குழுத் தலைவருமான எச். எம். எம். ஹரிஸ் நியமனக்கடிதங்களை வழங்கினார்.
 
2016ம் ஆண்டில் வறுமையற்ற இலங்கையை உருவாக்கும் இலக்கினை அடைவதன் ஊடாக சமுதாய சமத்துவத்தை ஏற்படுத்தி வறுமைக்;;கோட்டுக்;குள் வாழும் மக்களை சமுகத்தில் கௌரவமான பிரஜைகளாக உருவாக்க அனைவரும் முயற்சிக்க வேண்டும்.
 
30ஆண்டுகளுக்கு மேலாக மிகவும் மோசமான நிலையிலிருந்த இந்த நாட்டினை மீட்டெடுத்து வறுமைக்கு எதிராகப் போராடி மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்த ஜனாதிபதி அவர்கள் அறிமுகப்படுத்தும் 'திவிநெகும' (வாழ்வின் எழுச்சி) வேலைத்திட்டம் அதற்காக தாபிக்கப்படும் திணைக்களத்தினதும் நன்மைகள் வறுமையற்ற இலங்கையை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை.
 
இதற்காகப் பாடுபடும் ஜனாதிபதி அவர்களுக்கும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசீல் ராஜபக்ஷ உட்பட இத்திட்டத்தை உருவாக்க இணைந்து பணியாற்றிய அனைவருக்கும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்க வேண்டும்.

Post Bottom Ad

Responsive Ads Here