தந்தையர்களை இழந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு - THE MURASU

Jan 3, 2014

தந்தையர்களை இழந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

ஏ.ஜே.எம்.ஹனீபா;
ஜம்இய்யதுல் சபாப் அமைப்பினால் அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில், அட்டாளைச்சேனை, ஒலுவில், நிந்தவூர், அக்கறைப்பற்று, சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களில்; இருந்து தெரிவு செய்யப்பட்ட தந்தையர்களை இழந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (02) மாலை சம்மாந்துறை அல்உஸ்வா மதரசா வளாகத்தில் நடைபெற்றது.
இந்த வைபவத்தில் 156 மாணவர்களுக்கு மிகவும் பெறுமதிமிக்க கற்றல் உபகரணங்கள் அடங்கிய பொதியினை சம்மாந்துறை அல்உஸ்வா மதரசாவின் ஸ்தாபகரும் அதிபருமான மௌலவி ஐ.எல்.எம்.முஸ்தபா அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

இவ்வைபவத்தில் மதரசா நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Post Bottom Ad

Responsive Ads Here