• Latest News

  Jan 13, 2014

  எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா சுட்­டது ஏன்? அதிர்ச்சி சம்­பவத்தின்இ 47 ஆண்­டுகள் பூர்த்­தி

  தமிழ்த் திரை­யு­ல­கிலும் தமி­ழக அர­சி­யலிலும் நிகரற்ற நாய­க­னாக விளங்­கிய மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை (எம்.ஜி.ராமச்­சந்­திரன்) நடிகர் எம்.ஆர்.ராதா துப்­பாக்­கியால் சுட்டு 47 (12.01.2014) வரு­டங்கள் பூர்த்­தி­யா­கின்­றன. அது தமி­ழக சட்­ட­சபைத் தேர்தல் பிரசாரம் உச்சக் கட்­டத்தை எட்டிக் கொண்­டி­ருந்த காலம். முன்­னணி நடி­க­ரான எம்.ஜி.ஆர். அப்­போது தி.மு.கவில் நட்­சத்­திர அங்­கத்­த­வ­ராக இருந்தார். திடீ­ரென எம்.ஜி.ஆர். சுடப்­பட்ட செய்தி ஒட்­டு­மொத்த தமி­ழ­கத்­தையும் உலுக்­கி­யது. எம்.ஜி.ஆரை சுட்­ட­தோடு தன்­னையும் சுட்­டுக்­கொண்டார் எம்.ஆர்.ராதா. இரு­வரும் அவ­சரம் அவ­ச­ர­மாக மருத்­து­வ­ம­னைக்குக் கொண்டு செல்­லப்­பட்­டனர். தீவிர சிகிச்­சைக்குப் பிறகு இரு­வ­ருமே உயிர் பிழைத்­தனர். தனிப்­பட்ட முரண்­பாடு கார­ண­மாக நடந்த இந்த மோதல் அர­சி­யல்­ ரீ­தி­யா­கவும் முக்­கி­யத்­துவம் பெற்­றது.

  எம்.ஜி.ஆரை எம். ஆர்.ராதா சுட்டார் என்­பது பல­ருக்குத் தெரியும். ஆனால், எதற்­காக,  எந்தச் சூழ்­நி­லையில் எம்.ஆர். ராதா சுட்டார் என்­பது பலர் அறி­யா­தது. இச்­சம்­ப­வத்­திற்­கான உண்­மை­யான,  துல்­லி­ய­மான காரணம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.இ  நடி­கவேள் எம்.ஆர்.ராதா இரு­வ­ருக்கு மட்­டுமே தெரிந்த இர­க­சியம் என்­கின்­றனர்.
  ஆனால் 1967 ஜன­வரி 12 ஆம் திகதி இடம்­பெற்ற இச்­சம்­ப­வத்­திற்­கான கார­ண­மாக அப்­போது பர­ப­ரப்­பாக பேசப்­பட்ட விட­யங்கள் இவை:

  எம்.ஜி.ஆர். நடித்த 'பெற்­றால்தான் பிள்­ளையா?' என்ற படத்தை எம்.ஆர்.ராதாவின் நெருங்­கிய நண்­ப­ரான வாசு தயா­ரித்து 9.12.1966 -ஆம் திகதி வெளி­யிட்­டி­ருந்தார். நண்­ப­னுக்கு உதவி செய்யும் எண்­ணத்­தில்தான் படத்தை முடிக்க கட­னு­தவி செய்தார் ராதா.

  'படத்தை முடிக்க வேண்­டிய கட்­டத்தில் புதிய காட்­சி­களை இணைக்கச் சொல்­லி­விட்டார் எம்.ஜி.ஆர். அதனால் செலவு கூடி­விட்­டது. இலாப­மில்­லா­விட்­டாலும் பர­வா­யில்லை. கையைக் கடிக்­காமல் இருந்தால் போதும். உங்­க­ளுக்கு வேறு பணம் தர வேண்டும். என்ன செய்­வது என்றே விளங்­க­வில்லை' என எம்.ஆர்.ராதா­விடம் புலம்­பி­னாராம் வாசு.

   'நான் கொடுத்த பணம் திரும்பி வராதா? இந்நாள் வரை நான் இள­கிய மனம் உடை­ய­வ­னாக வாழ்ந்து வந்­தி­ருக்­கிறேன். எந்தச் சூழ்­நி­லை­யிலும் இனி யாருக்கும் உதவி செய்­யக்­கூ­டாது. பணம் கொடுத்து பகையைத் தேடிக் கொள்­ளக்­கூ­டாது என்ற என்னை மாற்­றி­விட்டாய். வா. என்­னோடு.... எம்.ஜி.ஆரி­டமே பேசுவோம்' என்று எம்.ஆர்.ராதா கூறி­னாராம்.

  அன்று மாலை 5 மணிக்கு ராமா­வரம் தோட்­டத்தில் உள்ள எம்.ஜி.ஆர். வீட்­டுக்கு எம்.ஆர்.ராதாவும் சென்றார். 'பெற்­றால்தான் பிள்­ளையா' படத்தின் தயா­ரிப்­பாளர் வாசுவும் சென்­றனர்.

  அங்கு செல்­லும்­போது எம்.ஆர். ராதா கைத்­துப்­பாக்­கி­யையும் எடுத்து வைத்­துக்­கொண்­டது எனக்குத் தெரி­யாது என்று பின்னர் ஒரு பேட்­டியில் வாசு கூறினார்.

  ராமா­வரம் தோட்­டத்தில் எம்.ஆர்.ராதாவும், வாசுவும் எம்.ஜி.ஆரைச் சந்­தித்­தனர். 'என்­னு­டைய தொழில் நடிப்­பது... பண விட­யத்­துக்கு நான் பொறுப்­பில்லை' என்று எம்.ஜி.ஆர் கூறி­னாராம். இதனால் உணர்ச்சி வசப்­பட்டு கைத்­துப்­பாக்­கியால் சுட்­டாராம் எம்.ஆர்.ராதா.

  'எம்.ஜி.ஆரை ராதாவும், வாசுவும் சந்­தித்­தார்கள். அப்­போது தக­ராறு ஏற்­பட்­டது. எம்.ஆர்.ராதா தன் மடியில் வைத்­தி­ருந்த கைத்­துப்­பாக்­கியை எடுத்து, எம்.ஜி.ஆரை சுட்டார். எம்.ஜி.ஆர். குனிந்தார். குண்டு இடது புற காது அருகே கன்­னத்தில் பாய்ந்­தது. உடனே ராதா துப்­பாக்­கியைத் தன் தலையில் வைத்து விசையை அழுத்­தினார். குண்டு அவர் நெற்­றியில் பாய்ந்­தது' என்று பொலிஸார் பின்னர் தெரி­வித்­தனர்.  சுடப்­பட்ட எம்.ஜி.ஆர். முதலில் ராயப்­பேட்டை ஆஸ்­பத்­தி­ரிக்குக் கொண்டு போகப்­பட்டார். முதல் சிகிச்­சைக்குப் பிறகு, சென்னை பொது வைத்­தி­ய­சா­லையில் சேர்க்­கப்­பட்டார். எம்.ஆர்.ராதாவும் இதே வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டார். அவர் நெற்­றியில் பாய்ந்த குண்டு அகற்­றப்­பட்­டது.

   ஆனால், எம்.ஜி.ஆர். கழுத்தில் பாய்ந்த குண்டு, மூன்று முக்­கிய நரம்­பு­க­ளுக்கு இடையே பதிந்­தி­ருந்­தது. அதை அகற்­றினால் நரம்­பு­க­ளுக்குச் சேதம் ஏற்­பட்டு, உயி­ருக்கே ஆபத்து ஏற்­ப­டலாம் என்ற நிலை. எனவே மருத்­து­வர்கள் இந்த குண்டை அப்­ப­டியே விட்டு விட்டுத் தையல் போட்­டனர்.

   பரங்­கி­மலைத் தொகு­தியில் தி.மு.க. வேட்­பா­ள­ராக எம்.ஜி.ஆர். போட்­டி­யிட்ட நேரத்­தில்தான் அவர் சுடப்­பட்டார். தேர்தல் பிர­சா­ரத்­திற்குப் போகா­ம­லேயே, ஆஸ்­பத்­தி­ரியில் படுத்­த­படி அவர் வெற்றி பெற்றார்.

  சிகிச்­சைக்குப் பின், எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் குணம் அடைந்­தார்கள். எம்.ஜி.ஆரை சுட்­ட­தாக ராதா மீது சைதாப்­பேட்டைக் நீதிமன்றில் வழக்கு நடந்­தது. இந்த வழக்கில் 1967.05.22 ஆம் திகதி எம்.ஜி.ஆர். நீதி­மன்­றுக்கு வந்து சாட்­சியம் அளித்தார்.

  வழக்கு விசா­ரணை முடிவில் எம்.ஆர்.ராதா குற்­ற­வாளி என்­பது உறுதி செய்­யப்­பட்டு சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. சென்னை செஷன்ஸ் நீதி­மன்­றத்தில் அவ­ருக்கு 7 ஆண்­டுகள் சிறைத்­தண்­டனை என்று தீர்ப்பு கூறப்­பட்­டது. இதை எதிர்த்து மேல் நீதி­மன்றில் மேன்­மு­றை­யீடு செய்தார். ஏழு ஆண்டுகள் சிறைத்­தண்­ட­னையை மேல்­நீ­தி­மன்றம் உறுதி செய்­தது.

  பின்னர் உயர் நீதி­மன்­றுக்கு மேன்­மு­றை­யீடு செய்தார். அந்­நீ­தி­மன்றம் சிறைத்­தண்­ட­னையை 5 ஆண்­டு­க­ளாகக் குறைத்­தது. சிறையில் நன்­ன­டத்தை கார­ண­மாக தண்­டனை சற்று குறைந்­தது. நான்­கரை வரு­டங்­க­ளின்பின் அவர் விடு­த­லை­யானார்.

  எம்.ஜி.ஆருக்கு ஏற்­பட்ட குண்டு காயத்­தினால் பேசும் திறன் பாதிக்­கப்­பட்டு இருந்­தாலும்  எம்.ஜி.ஆரின் செல்­வாக்கு பன்­ம­டங்கு உயர்ந்­து­விட்­டி­ருந்­தது. விடு­த­லை­யான எம்.ஆர்.ராதாவின் வாழ்வில் எத்­த­னையோ மாற்­றங்கள். அவ­ரு­டைய இயல்­பான ஆர்ப்­பாட்­டங்கள் இல்லை. கிண்டல், கலாட்டா, சத்தம் எல்­லாமே அடங்­கி­விட்­டன. ஆனால், அப்­போது அவ­ருக்கு ஏரா­ள­மான ரசி­கர்கள் இருந்­தனர்.
   
  அவ­ரது வாயைக் கிளறி செய்­தி­களை வர­வ­ழைத்து பத்­தி­ரி­கையில் வெளி­யிட முயன்­றார்கள். 'ஒன்றும் பேசா­தீர்கள் இரா­மச்­சந்­திரன் நல்­லவர். நடையைக் காட்­டுங்கள்' என்று பத்­தி­ரி­கைக்­கா­ரர்­களை விரட்­டி­வி­டுவார் எம்.ஆர். ராதா.

  தனது உயி­ருக்கே உலை வைக்­கக்­கூ­டிய நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டி­ருந்­தாலும் எம்.ஆர்.ராதா. மீது பகைமை பாராட்டவில்லை எம்.ஜி.ஆர் ஆனால், இந்த கசப்பான சம்பவத்திற்குப் பிறகு படத்தில் அவருடன் நடிப்பதை நிறுத்திக் கொண்டார் எம்.ஜி.ஆர் துப்பாக்கிப் பிரயோகத்தின் பின்னரும் ராதா அண்ணனை காப்பாற்றுங்கள் என எம்.ஜி.ஆர். கூறினாராம்.

  பின்னர் தி.மு.க.விலிருந்து எம்.ஜி.ஆர். விலக்கப்பட்டு 1972 இல் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தை ஆரம்பித்த எம்.ஜி.ஆர். 1977 முதல் 1987 இல் தான் இறக்கும்வரை அப்பதவியை வகித்தார்.இதற்கிடையில் 1979 ஆம் ஆண்டு எம்.ஆர்.ராதா தனது 72 ஆவது வயதில் காலமானார்.

  தமிழ்த் திரை­யு­ல­கிலும் தமி­ழக அர­சி­யலிலும் நிகரற்ற நாய­க­னாக விளங்­கிய மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை (எம்.ஜி.ராமச்­சந்­திரன்) நடிகர் எம்.ஆர்.ராதா துப்­பாக்­கியால் சுட்டு, இன்று
  ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யுடன் 47 வரு­டங்கள் பூர்த்­தி­யா­கின்­றன.  அது தமி­ழக சட்­ட­சபைத் தேர்தல் பிரசாரம் உச்சக் கட்­டத்தை எட்டிக் கொண்­டி­ருந்த காலம். முன்­னணி நடி­க­ரான எம்.ஜி.ஆர். அப்­போது தி.மு.கவில் நட்­சத்­திர அங்­கத்­த­வ­ராக இருந்தார். திடீ­ரென எம்.ஜி.ஆர். சுடப்­பட்ட செய்தி ஒட்­டு­மொத்த தமி­ழ­கத்­தையும் உலுக்­கி­யது. எம்.ஜி.ஆரை சுட்­ட­தோடு தன்­னையும் சுட்­டுக்­கொண்டார் எம்.ஆர்.ராதா. இரு­வரும் அவ­சரம் அவ­ச­ர­மாக மருத்­து­வ­ம­னைக்குக் கொண்டு செல்­லப்­பட்­டனர். தீவிர சிகிச்­சைக்குப் பிறகு இரு­வ­ருமே உயிர் பிழைத்­தனர். தனிப்­பட்ட முரண்­பாடு கார­ண­மாக நடந்த இந்த மோதல் அர­சி­யல்­ ரீ­தி­யா­கவும் முக்­கி­யத்­துவம் பெற்­றது.

  எம்.ஜி.ஆரை எம். ஆர்.ராதா சுட்டார் என்­பது பல­ருக்குத் தெரியும். ஆனால், எதற்­காக,  எந்தச் சூழ்­நி­லையில் எம்.ஆர். ராதா சுட்டார் என்­பது பலர் அறி­யா­தது. இச்­சம்­ப­வத்­திற்­கான உண்­மை­யான,  துல்­லி­ய­மான காரணம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.,  நடி­கவேள் எம்.ஆர்.ராதா இரு­வ­ருக்கு மட்­டுமே தெரிந்த இர­க­சியம் என்­கின்­றனர்.

  ஆனால் 1967 ஜன­வரி 12 ஆம் திகதி இடம்­பெற்ற இச்­சம்­ப­வத்­திற்­கான கார­ண­மாக அப்­போது பர­ப­ரப்­பாக பேசப்­பட்ட விட­யங்கள் இவை:

  எம்.ஜி.ஆர். நடித்த 'பெற்­றால்தான் பிள்­ளையா?' என்ற படத்தை எம்.ஆர்.ராதாவின் நெருங்­கிய நண்­ப­ரான வாசு தயா­ரித்து 9.12.1966 -ஆம் திகதி வெளி­யிட்­டி­ருந்தார். நண்­ப­னுக்கு உதவி செய்யும் எண்­ணத்­தில்தான் படத்தை முடிக்க கட­னு­தவி செய்தார் ராதா.

  'படத்தை முடிக்க வேண்­டிய கட்­டத்தில் புதிய காட்­சி­களை இணைக்கச் சொல்­லி­விட்டார் எம்.ஜி.ஆர். அதனால் செலவு கூடி­விட்­டது. இலாப­மில்­லா­விட்­டாலும் பர­வா­யில்லை. கையைக் கடிக்­காமல் இருந்தால் போதும். உங்­க­ளுக்கு வேறு பணம் தர வேண்டும். என்ன செய்­வது என்றே விளங்­க­வில்லை' என எம்.ஆர்.ராதா­விடம் புலம்­பி­னாராம் வாசு.

  'நான் கொடுத்த பணம் திரும்பி வராதா? இந்நாள் வரை நான் இள­கிய மனம் உடை­ய­வ­னாக வாழ்ந்து வந்­தி­ருக்­கிறேன். எந்தச் சூழ்­நி­லை­யிலும் இனி யாருக்கும் உதவி செய்­யக்­கூ­டாது. பணம் கொடுத்து பகையைத் தேடிக் கொள்­ளக்­கூ­டாது என்ற என்னை மாற்­றி­விட்டாய். வா. என்­னோடு.... எம்.ஜி.ஆரி­டமே பேசுவோம்' என்று எம்.ஆர்.ராதா கூறி­னாராம்.

  அன்று மாலை 5 மணிக்கு ராமா­வரம் தோட்­டத்தில் உள்ள எம்.ஜி.ஆர். வீட்­டுக்கு எம்.ஆர்.ராதாவும் சென்றார். 'பெற்­றால்தான் பிள்­ளையா' படத்தின் தயா­ரிப்­பாளர் வாசுவும் சென்­றனர்.

  அங்கு செல்­லும்­போது எம்.ஆர். ராதா கைத்­துப்­பாக்­கி­யையும் எடுத்து வைத்­துக்­கொண்­டது எனக்குத் தெரி­யாது என்று பின்னர் ஒரு பேட்­டியில் வாசு கூறினார்.

  ராமா­வரம் தோட்­டத்தில் எம்.ஆர்.ராதாவும்இ வாசுவும் எம்.ஜி.ஆரைச் சந்­தித்­தனர். 'என்­னு­டைய தொழில் நடிப்­பது... பண விட­யத்­துக்கு நான் பொறுப்­பில்லை' என்று எம்.ஜி.ஆர் கூறி­னாராம். இதனால் உணர்ச்சி வசப்­பட்டு கைத்­துப்­பாக்­கியால் சுட்­டாராம் எம்.ஆர்.ராதா.

  'எம்.ஜி.ஆரை ராதாவும்இ வாசுவும் சந்­தித்­தார்கள். அப்­போது தக­ராறு ஏற்­பட்­டது. எம்.ஆர்.ராதா தன் மடியில் வைத்­தி­ருந்த கைத்­துப்­பாக்­கியை எடுத்து, எம்.ஜி.ஆரை சுட்டார். எம்.ஜி.ஆர். குனிந்தார். குண்டு இடது புற காது அருகே கன்­னத்தில் பாய்ந்­தது. உடனே ராதா துப்­பாக்­கியைத் தன் தலையில் வைத்து விசையை அழுத்­தினார். குண்டு அவர் நெற்­றியில் பாய்ந்­தது' என்று பொலிஸார் பின்னர் தெரி­வித்­தனர்.

  சுடப்­பட்ட எம்.ஜி.ஆர். முதலில் ராயப்­பேட்டை ஆஸ்­பத்­தி­ரிக்குக் கொண்டு போகப்­பட்டார். முதல் சிகிச்­சைக்குப் பிறகு, சென்னை பொது வைத்­தி­ய­சா­லையில் சேர்க்­கப்­பட்டார். எம்.ஆர்.ராதாவும் இதே வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டார். அவர் நெற்­றியில் பாய்ந்த குண்டு அகற்­றப்­பட்­டது.

  ஆனால்இ எம்.ஜி.ஆர். கழுத்தில் பாய்ந்த குண்டுஇ மூன்று முக்­கிய நரம்­பு­க­ளுக்கு இடையே பதிந்­தி­ருந்­தது. அதை அகற்­றினால் நரம்­பு­க­ளுக்குச் சேதம் ஏற்­பட்டுஇ உயி­ருக்கே ஆபத்து ஏற்­ப­டலாம் என்ற நிலை. எனவே மருத்­து­வர்கள் இந்த குண்டை அப்­ப­டியே விட்டு விட்டுத் தையல் போட்­டனர்.

  பரங்­கி­மலைத் தொகு­தியில் தி.மு.க. வேட்­பா­ள­ராக எம்.ஜி.ஆர். போட்­டி­யிட்ட நேரத்­தில்தான் அவர் சுடப்­பட்டார். தேர்தல் பிர­சா­ரத்­திற்குப் போகா­ம­லேயே, ஆஸ்­பத்­தி­ரியில் படுத்­த­படி அவர் வெற்றி பெற்றார்.

  சிகிச்­சைக்குப் பின், எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் குணம் அடைந்­தார்கள். எம்.ஜி.ஆரை சுட்­ட­தாக ராதா மீது சைதாப்­பேட்டைக் நீதிமன்றில் வழக்கு நடந்­தது. இந்த வழக்கில் 1967.05.22 ஆம் திகதி எம்.ஜி.ஆர். நீதி­மன்­றுக்கு வந்து சாட்­சியம் அளித்தார்.

  வழக்கு விசா­ரணை முடிவில் எம்.ஆர்.ராதா குற்­ற­வாளி என்­பது உறுதி செய்­யப்­பட்டு சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. சென்னை செஷன்ஸ் நீதி­மன்­றத்தில் அவ­ருக்கு 7 ஆண்­டுகள் சிறைத்­தண்­டனை என்று தீர்ப்பு கூறப்­பட்­டது. இதை எதிர்த்து மேல் நீதி­மன்றில் மேன்­மு­றை­யீடு செய்தார். ஏழு ஆண்டுகள் சிறைத்­தண்­ட­னையை மேல்­நீ­தி­மன்றம் உறுதி செய்­தது.

  பின்னர் உயர் நீதி­மன்­றுக்கு மேன்­மு­றை­யீடு செய்தார். அந்­நீ­தி­மன்றம் சிறைத்­தண்­ட­னையை 5 ஆண்­டு­க­ளாகக் குறைத்­தது. சிறையில் நன்­ன­டத்தை கார­ண­மாக தண்­டனை சற்று குறைந்­தது. நான்­கரை வரு­டங்­க­ளின்பின் அவர் விடு­த­லை­யானார்.

  எம்.ஜி.ஆருக்கு ஏற்­பட்ட குண்டு காயத்­தினால் பேசும் திறன் பாதிக்­கப்­பட்டு இருந்­தாலும்  எம்.ஜி.ஆரின் செல்­வாக்கு பன்­ம­டங்கு உயர்ந்­து­விட்­டி­ருந்­தது. விடு­த­லை­யான எம்.ஆர்.ராதாவின் வாழ்வில் எத்­த­னையோ மாற்­றங்கள். அவ­ரு­டைய இயல்­பான ஆர்ப்­பாட்­டங்கள் இல்லை. கிண்டல்இ கலாட்டா, சத்தம் எல்­லாமே அடங்­கி­விட்­டன. ஆனால், அப்­போது அவ­ருக்கு ஏரா­ள­மான ரசி­கர்கள் இருந்­தனர்.

  அவ­ரது வாயைக் கிளறி செய்­தி­களை வர­வ­ழைத்து பத்­தி­ரி­கையில் வெளி­யிட முயன்­றார்கள். 'ஒன்றும் பேசா­தீர்கள் இரா­மச்­சந்­திரன் நல்­லவர். நடையைக் காட்­டுங்கள்' என்று பத்­தி­ரி­கைக்­கா­ரர்­களை விரட்­டி­வி­டுவார் எம்.ஆர். ராதா.

  தனது உயி­ருக்கே உலை வைக்­கக்­கூ­டிய நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டி­ருந்­தாலும் எம்.ஆர்.ராதா. மீது பகைமை பாராட்டவில்லை எம்.ஜி.ஆர் ஆனால், இந்த கசப்பான சம்பவத்திற்குப் பிறகு படத்தில் அவருடன் நடிப்பதை நிறுத்திக் கொண்டார் எம்.ஜி.ஆர் துப்பாக்கிப் பிரயோகத்தின் பின்னரும் ராதா அண்ணனை காப்பாற்றுங்கள் என எம்.ஜி.ஆர். கூறினாராம்.

  பின்னர் தி.மு.க.விலிருந்து எம்.ஜி.ஆர். விலக்கப்பட்டு 1972 இல் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தை ஆரம்பித்த எம்.ஜி.ஆர். 1977 முதல் 1987 இல் தான் இறக்கும்வரை அப்பதவியை வகித்தார்.இதற்கிடையில் 1979 ஆம் ஆண்டு எம்.ஆர்.ராதா தனது 72 ஆவது வயதில் காலமானார்.

  - See more at: http://metronews.lk/feature.php?feature=51&display=0#sthash.9qte4lTW.dpuf
  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Post a Comment

  Item Reviewed: எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா சுட்­டது ஏன்? அதிர்ச்சி சம்­பவத்தின்இ 47 ஆண்­டுகள் பூர்த்­தி Rating: 5 Reviewed By: The Murasu
  Scroll to Top